பேருந்தை நிறுத்திக் காத்திருந்த ஓட்டுநருக்குப் பாராட்டு!
நீலகிரி மாவட்டம் கெத்தை மலைப்பாதையில் குட்டிகளுடன் யானை குடும்பம் ஒன்று நடமாடி வரும் நிலையில், இன்று காலை யானைகள் சாலையைக் கடக்கும் வரை சுமார் அரை மணி நேரம் பேருந்தை நிறுத்தி, பொறுமையாக இயக்கிச் சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் செயல் இணையத்தில் பாராட்டைப் பெற்று வருகிறது.