தேன்கனிக்கோட்டையில் இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்த காவல் துறையினர்
**********
தேன்கனிக்கோட்டை காவல் நிலைய பகுதியில் முகமது கவுஸ் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை தேன்கனிக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை முன்பு 11.06.2023 ஆம் தேதி காலை 9.00 மணிக்கு நிறுத்திவிட்டு கழிப்பறைக்கு சென்று விட்டு வந்து பார்த்தபோது நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் காணவில்லை எனவும் அக்கம் பக்கம் தேடியும் விசாரித்து கிடைக்கவில்லை என முகமது கவுஸ் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.