Type Here to Get Search Results !

கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ஈரோடு:ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல் பட்டு வருகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தாளவாடி, சத்தியமங்கலம் ,ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கர்நாடகா, பெங்களூர் போன்ற பகுதியில் இருந்து காய்கறி கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஈரோடு வ. உ. சி. மார்க்கெ ட்டுக்கு தினமும் 7000 தக்காளி பெட்டிகள் வரத்தாகி வந்தன. தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டு குறைந்த அளவே வருகிறது. இன்று வ.உ.சி. மார்க்கெ ட்டிற்கு 2,500 தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. இன்று ஆந்திரா மாநிலம் குப்பம் , கர்நாடக மாநிலம் கொள்ளே கால் ஆகிய பகுதியில் இருந்து மட்டுமே தக்காளி வரத்தாகி உள்ளது.இதனால் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனையானது.அதனைத்தொடர்ந்து சிறிது சிறிதாக விலை உயர்ந்து கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.35 -க்கு விற்பனையானது. இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.45 முதல் 50 வரை விற்பனையாகி வருகிறது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் விளைச்சல் பாதிப்பாலும், வரத்து குறைந்ததாலும் கருப்பு அவரை, பச்சை மிளகாய், பீன்ஸ் ஆகிய காய்கறிகளின் விலை ரூ. 100 - ஐ தாண்டி உள்ளது.ஈரோடு வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறி களின் விலை கிலோவில் வருமாறு:கத்திரிக்கா - 60, வெண்டை க்காய்-40, பீர்க்கங்காய்- 60, பாவக்காய் - 60, முள்ளங்கி-50, முட்டைகோஸ் - 25, புடலங்காய்-45, கருப்பு அவரை - 110, பெல்ட் அவரை - 100, உருளைக்கிழங்கு - 30, குடைமிளகாய் - 60, பச்சை மிளகாய் - 120, சுரக்காய் - 15, இஞ்சி - 220, பீட்ரூட் - 55, கேரட் - 85, காலிபிளவர் - 35, கோவைக்காய் - 55, வெள்ளரிக்காய் - 50, சேனைக்கிழங்கு - 50, கருணைக்கி ழங்கு - 60, சவ்சவ் - 25, சின்ன வெங்காயம்- 60 முதல் 70, பெரிய வெங்காயம் - 25. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.