திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த சங்கர நயினார் மகன் மணிகண்டன் (35) என்பவர் கடந்த 05.06.2020 அன்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை அவதூறாக பேசி வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் மேற்படி எதிரி மணிகண்டன் மீது இந்திய தண்டனை சட்டம் 153A (1)(a), 292A – IPC மற்றும் 67- IT ACT 2008 505(1)(b)ன் படி வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி வன்முறையை தூண்டும் வகையிலான வீடியோ தற்போது சிலர் வாட்ஸ் ஆப்பில் பகிர்வதாக தெரியவருகிறது. அவ்வாறு பரப்பினால் அது சட்டவிரோதமான செயலாகும். ஆகவே மேற்படி வீடியோவை வாட்ஸ் ஆப் குழுக்கள் உட்பட சமூக வலைதள பக்கங்களிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ யாராவது பகிர்ந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுவாகவே உண்மைக்கு புறம்பான செய்திகளையோ, வன்முறையை தூண்டும் சட்டவிரோதமான செய்திகளையோ அல்லது வீடியோக்களையோ சமூக வலைதளங்களில் பரப்புவோரை எளிதில் கண்டுபிடிப்பதற்கான தொழில்நுட்பம் காவல்துறையில் உள்ளது. ஆகவே கண்டுபிடிக்க இயலாது என்று நினைத்து யாரும் இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடவேண்டாம். அவ்வாறு பரப்பினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.