ஏழு தங்கப் பதக்கங்களை வென்ற ராணிப்பேட்டை விளையாட்டு வீரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்ஜம்மு-காஷ்மீரில் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் ஏழு தங்கப் பதக்கங்களை வென்ற ராணிப்பேட்டை விளையாட்டு வீரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து மாநிலங்களிடையேயான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியில் தமிழ்நாடு, பஞ்சாப், கேரளம், மத்திய பிரதேசம், கர்நாடகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 616 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாடு சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்று 7 தங்கப்பதக்கம், 4 வெள்ளி பதக்கங்களைப் பெற்றனர். அதேபோல் தடகளப் போட்டியில் 1 தங்கப் பதக்கம், 3 சில்வர் பதக்கம், 1 வெண்கல பதக்கம் பெற்றனர்.
இந்நிலையில் விளையாட்டு போட்டியைமுடித்துக் கொண்டு ராணிப்பேட்டை திரும்பிய விளையாட்டு வீரர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
அப்பொழுது விளையாட்டு வீரர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரண் ஸ்ருதி மேலும் பல வெற்றிகளை பெற்று பல விருதுகளை பெற வேண்டும் என வாழ்த்தினார். அப்போது பயிற்சியாளர்கள் சிவகுமார், தர்ஷன் ஆகியோர் உடனிருந்தனர்