ஆளுநர் ஒப்புதல்!செந்தில் பாலாஜியின் துறை மாற்ற பரிந்துறை
அமைச்சர் செந்தில்பாலாஜி கைதுசெய்யப்பட்டதை அடுத்து அவரது துறைகளை மாற்றி பிற மைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்திருந்த நிலையில் இன்று மாலை ஒப்புதல் அளித்துள்ளார்.
பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறையினா் செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளார்.
இதன்படி செந்தில் பாலாஜி கவனித்துவந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு, மின்சாரத்துறையையும், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் கூடுதலாக கவனிக்க உள்ளனர்.
செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக அவர் தொடர முடியாது எனக் கூறிய முதல்வரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதான நிலையில் அவர் வசமிருந்த துறைகள் இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர நிர்வாக ரீதியான அரசாணையை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது