திண்டுக்கல்லில் பக்ரீத் பண்டிகைக்கு வெட்டுவதற்கு வளர்க்கப்பட்டது
திண்டுக்கல் பாறைப்பட்டி எம்.கே.எஸ். நகரை சேர்ந்த ஒருவர் பக்ரீத் பண்டிகையின் போது உறவினர்களுக்கு குர்பாணி கொடுப்பதற்காக கடந்த சில மாதங்களாக ஆடு வளர்த்தார். 29 ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் வெட்டுவதற்காக மாடியில்
கட்டியிருந்த ஆட்டை அவிழ்க்க சென்றார்.
அப்போது ஆடு உரிமையாளரை கண்டு பயந்து கீழே குதித்தது. அப்போது அருகிலிருந்த மின் வயரில் சிக்கி மின்சாரம் ஆட்டின் உடலில் பாய்ந்து 4 கால்களும் கருகியது. அதன்பின் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆட்டை
மின் வயரின் அருகே ஏணி வைத்து மரக்கட்டையால் அக்கம்பக்கத்தினர் கீழே தள்ளினர். உயிருக்கு போராடிய ஆட்டை அதன் உரிமையாளர் கண்ணீரோடு பார்த்து வேதனையடைந்தார். இப்பிரச்னையால் எம்.கே.எஸ். நகர் பகுதியில் அரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.