Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறைஅலுவலர்களுடனானஆய்வு கூட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில்  வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறைஅலுவலர்களுடனானஆய்வு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா  முன்னிலையில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / ஆணையர் (ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை) ஜி.பிரகாஷ்  தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / ஆணையர் (ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை) ஜி.பிரகாஷ் வேளாண்மை- உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா பறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுர குடியிருப்புகள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஜல்ஜீவன் மிஷன், அம்ருத் 20, தூய்மை பாரத இயக்கம் 20, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நிலுவையில் உள்ள பட்டாக்கள், வட கிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் இலக்கியம், பள்ளிக் கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், சிறப்பு திட்ட செயலாக்கம், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும், தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையிலும் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செயல்பாட்டிற்க்கு உறுதுணையாகவும் இருக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும் மற்றும் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி மூசுமைநாரணவ்ரே மனிஷ் சங்கர்ராவ் ., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) .கா.செல்வராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை உழவர் நலத்துறை) .வெங்கடேசன் (பொ), ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வள்ளி, துணை இயக்குநர் (சுகாதாரபணிகள்) மரு.சோமசுந்தரம், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர்.ஜானகி ரவீந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் .ராஜ்குமார், மாநகர நல அலுவலர் அலுவலர் மருபிரகாஷ் உட்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.