Type Here to Get Search Results !

ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் தூக்கு போட்டு நர்ஸ் தற்கொலை..... சாவில் சந்தேகம் பெற்றோர் புகார்

ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் தூக்கு போட்டு நர்ஸ் தற்கொலை..... 
சாவில் சந்தேகம் பெற்றோர் புகார்.... _________________________ 

ஈரோட்டில்ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்ஸ் தூக்கு போட்டு தற்கொலை
சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் பரபரப்பு புகார்
ஈரோடு, ஜூன்.18-

புதுக்கோட்டை மாவட்டம் மன விடுதி, மேலப்பட்டி ஆதி திராவிடர் தெருவை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவரது மகள் சவுந்தர்யா (24). இவர் கடந்த இரண்டரை வருடமாக ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து ஆஸ்பத்திரி பின்பகுதியில் தங்கி வந்துள்ளார். 
இந்நிலையில் சம்பவத்தன்று சவுந்தர்யா திடீரென ஆஸ்பத்திரி வளாகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சவுந்தர்யா  உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சவுந்தர்யா தற்கொலை செய்வதற்கு முன்பு யாரிடமோ செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதாக தெரிய வந்தது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் இருந்து சவுந்தர்யா பெற்றோர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள் தங்கள் மகளின் சாவில்  சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.