Type Here to Get Search Results !

ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்கை வேண்டும் ஈரோடு பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்கை வேண்டும் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு செல்லபாஷா வீதியில் அரசு நிதி உதவி பெறும் தொடக்க பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு ஆங்கில வழிக்கல்வியில் அதிகமாக மாணவ -மாணவிகள் படித்தனர்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் இந்த பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு வகுப்புகள் எடுக்கப்பட்டன. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் 359 மாணவ-மாணவிகளும், ஆங்கில வழியில் 361 மாணவ-மாணவிகளும் என 720 பேர் சேர்க்கை பெற்றனர்.
50 சதவீதம் இந்த நிலையில், இந்த பள்ளிக்கூடத்தில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்க்கை பெற்ற மாணவ-மாணவிகளையும், ஏற்கனவே பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகளையும் பெற்றோர் அனுமதியின்றி பள்ளிக்கூட நிர்வாகமே தமிழ் வழியில் சேர்த்து, அதற்கான பாட புத்தகங்களை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த பெற்றோர் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு தலைமை ஆசிரியர் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடம், ‘பள்ளிக்கல்வித்துறை பள்ளிக்கூடத்தில் சேர்க்கை பெற்றமாணவ-மாணவிகளை 50 சதவீதம் தமிழ் வழியிலும், 50 சதவீதம் ஆங்கில வழியிலும் கற்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதைத்தான் நாங்கள் நடைமுறைப்படுத்தி உள்ளோம்’ என்றார்.
முற்றுகைஇதற்கு பெற்றோர், ‘எங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் போது இந்த விவரங்களை கூறாமல், ஆங்கில வழிக்கல்வி என சேர்க்கை பெற்று, தற்போது தமிழ் வழிக்கல்வியில் மாற்றியதை ஏற்க முடியாது’ எனக்கூறி பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சம்மந்தப்பட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி வந்து இந்த குழப்பத்திற்கு தீர்வு காணும் வரை நாங்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம் என கூறி தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட தொடக்கல்வி அலுவலர் ஜோதி சந்திரா சம்மந்தப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கலந்தலோசித்து, ஆங்கில வழிக்கல்வியில் சேர்த்த மாணவ-மாணவிகளை தொடர்ந்து ஆங்கில வழிக்கல்வில் படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதை ஏற்றுக்கொண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நோட்டீஸ்

இதுகுறித்து தொடக்கல்வி அலுவலர் ஜோதிசந்திரா கூறியதாவது:-

பள்ளிக்கல்வித்துறை சட்ட விதிப்படி, அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடத்தில் 4 வகுப்பறைகள் இருந்தால், 50 சதவீதம் தமிழ் வழியிலும், 50 சதவீதம் ஆங்கில வழிக்கல்வியிலும் வகுப்புகள் நடத்தலாம். அரசு நிதி உதவி பெறும் இந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர், பெற்றோரிடம் அரசு உத்தரவினை முறையாக தெரிவிக்காமல், மாணவ-மாணவிகளை ஆங்கில வழிக்கல்வியில் சேர்த்து விட்டு, பின்னர் தமிழ் வழியில் சோ்த்துள்ளதாக தெரிகிறது.
இது தலைமை ஆசிரியரின் தவறான நடவடிக்கை தான். இதுதொடர்பாக விரிவான விளக்கம் கேட்டு பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியருக்கும், நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். மேலும், பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் ஆங்கில வழியில் படிக்க உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

-------------

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.