முதன்மை அமா்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!செந்தில் பாலாஜி தரப்பு மனு தள்ளுபடி
செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை முதன்மை அமா்வு இன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சட்டவிரோத பணமோசடி வழக்கில் தமிழக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்த சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
தொடர்ந்து, நேற்று மாலை நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்றத்தில் வாதிட்டனர். இதற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வாதத்தை முன்வைத்தது.
இந்நிலையில், ஏற்கெனவே நீதிமன்றக் காவல் அளித்துவிட்டதால், இந்த மனு செல்லத்தக்கதல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி இன்று உத்தரவிட்டுள்ளார்