அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28 ம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து புழல்சிறை அதிகாரிகள் செந்தில்பாலாஜி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் துணை ஆணையர் செளந்தர்ராஜன் தலைமையில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வந்துள்ளனர். செந்தில்பாலாஜிக்கு ஏற்கனவே துணைராணுவப்படையினர் பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பிற்காக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.