Type Here to Get Search Results !

செந்தில் பாலாஜியை உத்தமர் போல் சித்தரிப்பதை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்


செந்தில் பாலாஜியை உத்தமர் போல் சித்தரிப்பதை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்
தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு யுவராஜ் அவர் மனுவில் கூறியதுசெந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சமயத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்ததாக அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 15.06.202 தனது சகோதரி திருமதி கனிமொழி கைது செய்யப்பட்ட போது துடிக்காத முதல்வர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது மட்டும் துடிப்பது ஏன்? பந்தத்தை விட பணமே முக்கியமா ?அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள் சரியானவை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு தொடர்புடைய அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருடைய வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகள் பந்தத்தை விட பணமே முக்கியம் என்பது போல்,  2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தனது சகோதரி திருமதி கனிமொழி கைது செய்யப்பட்ட போது துடிக்காத முதல்வர் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது மட்டும் துடிப்பது ஏன்? ஊழல் குற்ற சாட்டுக்களில் ஈடுபடுவோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கம். இந்திய திருநாட்டையே உலுக்கி போட்ட 2ஜி வழக்கில் மிகப்பெரிய அளவில் ஊழல் செய்து தனது சொந்த சகோதரியான திமுகவின் மகளிர் அணி தலைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி கனிமொழி அவர்களை கலைஞர் இருக்கும் பொழுதே கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு பிறகு கைது செய்தனர். அப்போது நீங்கள் மத்தியில் ஆண்ட காங்கிரஸோடு கூட்டணி மந்திரிசபையில் இருந்தீர்கள்.   அப்போது ஜனநாயகம் இருந்தது? ஆனால் இப்போது ஜனநாயகம் இல்லையா? இதற்கு ஸ்டாலின் அவர்கள் பதில் கூறுவார்களா? 

தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் பத்து ரூபா பாலாஜி என தமிழகத்தில் பட்டிதொட்டி எல்லாம் பேசப்பட்டு வரும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்யும் போது மட்டும் பதட்டப்படுவதும் துடிப்பதும் ஏன்?. செந்தில்பாலாஜி வாய் திறந்து ஏதாவது கூறிவிட்டால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் தான் முதல்வரும், அமைச்சர்களும் இன்று பதறிப்போய், ஓடோடி சென்று செந்தில்பாலாஜியை பார்க்கின்றனர், கண்டன அறிக்கை எல்லாம் விடுகிறார்கள். எந்த ஆவணங்களை கைப்பற்றினாலும், அதற்கு விளக்கம் தருவேன் என்று கூறிய செந்தில் பாலாஜி, விளக்கத்தை தந்து விட்டு செல்ல வேண்டியதுதானே. எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்.

தலைமைச் செயலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, 'தமிழகத்திற்கு தலைகுனிவு' என்றார் ஸ்டாலின். இப்போது, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அறையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருப்பதுதான் தமிழகத்துக்கே பெரும் தலைகுனிவு. செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடத்த சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்ட போது திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் எங்கு போனார்கள்?, ஆனால் இன்று அத்துமீறல், மனித உரிமை மீறல் என குரல் கொடுக்கிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை அவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் செந்தில் பாலாஜியை உத்தமர் போல் சித்தரிப்பதை தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.