ஈரோடு காந்திஜி ரோட்டில்
கோ ஆப் டெக்ஸ் புது பொலிவுடன் கூடியகுளிரூட்டும் வசதியோடு கைத்தறி துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.காந்தி, திறந்து வைத்தார் ஈரோட்டில் கோ–ஆப்டெக்ஸ் நவீனமாக்கப்பட்ட விற்பனை நிலைய திறப்பு விழா கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. நிலையத்தை திறந்து, கைத்தறி துறை பிரசார வாகனத்தை துவக்கி வைத்து கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பின்னர் முதல் விற்பனையும் இரண்டாவது பணியும் மூன்றாவது விற்பனை மூன்று விற்பனையும் துவக்கி வைத்தார்நிருபர்களிடம் கூறியதாவது:இலவச வேட்டி, சேலை கடந்தாண்டு தாமதமானாலும், தரமாக உற்பத்தி செய்து வினியோகித்தோம். 5 டிசைனுடன் வேட்டியும், 15 டிசைனுடன் சேலையும் உற்பத்தி செய்தோம். வரும் பொங்கலுக்காக இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு டெண்டர் கோரி உள்ளோம். ஆக.,க்குள் பணி துவங்கி, டிச.,ல் பணியை முடித்து ஜன.,ல் வினியோகித்துவிடுவோம்.
கைத்தறி நெசவாளர்களுக்கு கடந்தாண்டும், இந்தாண்டும் தலா, 10 சதவீத கூலி உயர்த்தி உள்ளோம். கோ ஆப்டெக்ஸில், 10 ஆண்டுக்கு மேலாக தற்காலிக பணியாளராக பணி செய்த, 466 பேர் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜவுளித்துறைக்கு சவாலாக இருப்பது நுால் விலை ஏற்ற, இறக்கமாகும். இது, மத்திய அரசின் கையில் உள்ளது. தமிழகத்துக்கு, 125 லட்சம் பேல் நுால் தேவை. நம்மால், 5 லட்சம் பேல் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. கடந்த, 2 ஆண்டுக்கு முன் கோ–ஆப்டெக்ஸ் நிறுவனம், 7.66 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருந்ததை மாற்றி கடந்தாண்டே, 10 லட்சம் ரூபாய் லாபத்தில் செயல்படுகிறது. 180 கோடி ரூபாய்க்குள் இருந்த விற்பனையை கடந்தாண்டு, 200 கோடியாக்கி, நடப்பாண்டில், 400 கோடிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
தற்போது அதை, 15 லட்சம் பேலாக உயர்த்தி உள்ளோம். மற்ற பேல்களை பிற மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம்.தற்போது நுால் விலை சற்று குறைந்திருந்தாலும், துணிக்கு விலை இல்லை, தேக்கம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர். இதற்கு, ஏற்றுமதி குறைவாக இருப்பதே காரணமாகும். இதுபற்றி, மத்திய அரசிடம் பேசி உள்ளோம்.
மேற்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அறிவிக்கப்பட்டு, சேலத்தில், 113 கோடி ரூபாயில் ஏற்படுத்தும் பணி துவங்கி நடந்து வருகிறது.கடந்தாண்டு கோவையில் ஜவுளி துறையினரை சந்தித்தபோது, 1 சதவீத செஸ் வரியை நீக்க கோரினர். பல மாநிலங்களில் உள்ள காட்டன் கார்பரேஷன் ஆப் இந்தியா குடோனில் இருந்து, நுாலை எடுத்து வரும்போது 1 சதவீத செஸ் வரியால் பாதிக்கிறது என்றனர். இதற்கு மாற்றாக காட்டன் கார்பரேஷன் ஆப் தமிழ்நாடு என துவங்கி, அரசே நுாலை தமிழகத்துக்குள் இயக்கம் செய்து வழங்கலாமா என ஆலோசித்து செய்து வருகிறோம்.
எம்.பி., கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் சி.கே.சரஸ்வதி, இளங்கோவன், ஏ.ஜி.வெங்கடாசலம், மேயர் நாகரத்தினம் உடன் ஆகியோர் கலந்து கொண்டு முதல் விற்பனையையும் தொடக்கி வைத்தனர் பின்னர் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கைத்தறித்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்உட்பட பலர் பங்கேற்றனர்.
–––––––