Type Here to Get Search Results !

7-வது நாளாகத் தொடரும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை

7-வது நாளாகத் தொடரும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை
ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப் பெறவேண்டும். இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். பணி நிரந்தரம், குறைந்தபட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் வினியோகப் பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் கடந்த 23ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடியும் வரைந்தது. தங்களது கோரிக்கைகள் அரசு கவனத்திற்கு செல்லும் வகையில் ஒவ்வொரு நாளும் தூய்மை பணியாளர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டல அலுவலகங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மனு கொடுத்தனர். நேற்று காளை மாட்டு சிலை பகுதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இன்று 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக என்ன போராட்டத்தில் ஈடுபடுவது என்பது குறித்து இன்று ஈரோடு மாவட்டம் சி ஐ டி யு தலைமை அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஏ ஐ டி யு சி சின்னசாமி, சிஐடியு சுப்பிரமணியம், எல் பி எஃப் கோபால் உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசித்து வருகின்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும். முன்னதாக 7-வது நாளாக குப்பை அள்ளும் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மலை போல் குப்பை தேங்கி உள்ளது. மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட நிரந்தர துப்புரவு பணியாளர்களை கொண்டு குப்பை அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.