Type Here to Get Search Results !

ஈரோட்டில் சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்திற்கு தேர்தல் நடத்தக் கோரி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது, ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு


ஈரோட்டில் சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்திற்கு தேர்தல் நடத்தக் கோரி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது, ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு
*ஈரோட்டில் 300 பேர், கோபியில் 120 பேர், சத்யமங்கலத்தில் 74 விவசாயிகள் கைது*. 

*ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு2,000 க்கும் மேற்பட்ட விவசாயிகளால், விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்ட சத்தியமங்கலம் மலர்கள் சந்தையை ஊழல், செய்து 32 பேர் மோசடியாக அபகரித்ததற்கு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும், சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்திற்கு மலர் விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்த்து தேர்தல் நடத்த கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு போராட்டம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் - போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - 150 பெண்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது - கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் தொடக்கம்* 
----------------------------------------

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மலர்கள் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது, இடைத்தரகர்களாலும், வியாபாரிகளாலும் சுரண்டப்பட்ட விவசாயிகள் இணைந்து 1999 ம் ஆண்டு தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் தலைமை சங்கம் என்கிற சங்கத்தை தொடங்கி, விவசாயிகளால் - விவசாயிகளுக்காக மலர்கள் சந்தையையும் தொடங்கி, 2000க்கும் மேற்பட்ட மலர் விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்டு இயங்கி வருகிறது, கடந்த 2013 ஆம் ஆண்டு சங்கத்தில் நிர்வாகம் சரியில்லை என்றும், முறைகேடுகள் நடைபெற்று வருகிறது என்று பிரச்சினைகளை கிளப்பி இறுதியாக, தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டு 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாக்களித்து, தலைவராக கிருஷ்ணமூர்த்தி, செயலாளராக கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாக குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.

 ஆண்டு தோறும் பொதுக்குழு, செயற்குழுவை நடத்துவது எனவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வைத்து நிர்வாகிகளை தேர்வு செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் சங்கத்தின் சார்பில் வங்கி கணக்கு தொடங்கி வரவு செலவு செய்யாமல், தனிப்பட்ட முறையில் வங்கி கணக்கு தொடங்கி வரவு செலவு செய்து, அதற்கு முறையாக கணக்கை செயற்குழு, பொதுக்குழுவில் தாக்கல் செய்யாமலும், சங்கங்களின் பதிவாளர் முன்பும் தாக்கல் செய்யாமலும், மிகப்பெரிய அளவில் மோசடி செய்துள்ளனர்.

 இவற்றையெல்லாம் மறைப்பதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான சங்கத்தின் சொத்துக்களான வியாபாரம், சுங்க பணம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் 32 பேரை மட்டும் கொண்டு சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கம் என்கிற சங்கத்தை புதிதாக துவக்கி, மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து பல்வேறு சமயங்களில் கேள்வி கேட்ட விவசாயிகளை சந்தையில் பூ விற்க விடாமல் புறக்கணிப்பு செய்து மிகப் பெரிய மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையிலும், வருவாய்த்துறையிலும் உரிய வகையில் புகார் கொடுக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, சங்கங்களின் பதிவாளர் அவர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே 2000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான சொத்துக்களோடு, சுங்க பணத்தோடு இயங்கி வரும் சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்தில் அனைத்து விவசாயிகளையும் உறுப்பினராக சேர்த்து தேர்தல் நடத்த கோரியும், நடைபெற்ற ஊழல், மோசடி குறித்து ஆதாரத்தோடு கொடுக்கப்பட்ட புகாரின் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று மாலைல இருந்து காவல்துறை கடுமையாக விவசாயிகளை அச்சுறுத்தியது, போராட்டத்திற்கு வந்தவர்களை சத்தியமங்கலத்தில் 40 பெண்கள் உட்பட 74 பேரும், 61 பெண்கள் உட்பட 120 பேரும், ஈரோட்டில் 44 பெண்கள் உட்பட 300 பேரும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர்  சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் சங்கத்திற்கு அனைத்து மலர் விவசாயிகளையும் உறுப்பினர்களாக சேர்த்து தேர்தல் நடத்த ஆணையரை நியமிக்க வேண்டும்,

2000 விவசாயிகளுக்கு சொந்தமான சுங்க பணத்தை, வியாபாரத்தை, நம்பிக்கை மோசடி செய்து, ஏமாற்றிய கிருஷ்ணமூர்த்தி முத்துசாமி குறித்த அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் ஆகிய கோரிக்கை நிறைவேறும் வரை விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்கள்.

இன்றைய போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நடராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் கோபால்சாமி, மாநில இயற்கை வேளாண் அணி துணை செயலாளர் பனையம்பள்ளி மோகன், வேளாண் தொழில் முனைவர் மன்றத்தின் மாநில செயலாளர் ஐந்துணை வேலுச்சாமி, அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் வழக்கறிஞர் செந்தில்நாதன், ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

சத்தியமங்கலம் மலர்கள் விவசாயிகள் உரிமை மீட்பு குழுவைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சிவலிங்கம், கனகராஜ், வேலுமணி, தேவராஜ், ரவிச்சந்திரன், சின்னச்சாமி, கதிரேஷ், செந்தில் ராஜன், நாகராஜ், ராஜேஸ்வரி, வேலுச்சாமி, சண்முகம், சுப்பிரமணி கலந்து கொண்டு கைதாகி உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.