கோவை அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,600 கோடி செலிவல் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக அமைக்கப்படுகிறது.
இதற்காக மொத்தம் 306 தூண்கள் அமைக்கப்பட வேண்டும். இதில் இதுவரை 270 தூண்கள் முழுவதும் அமைக்கப்பட்டு விட்டன. இதுதவிர விமான நிலையம் அருகே சிட்ராவில் வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறுவதற்கு வசதியாக ஏறுதளம் அமைக்கப்படுகிறது.
"விமான நிலையம், ஹோப்காலேஜ், நவ இந்தியா, அண்ணாசிலை ஆகிய இடங்களில் 7 மீட்டர் அகலத்தில் ஏறு தளங்கள் மற்றும் இறங்கு தளங்கள் இந்த மேம்பாலத்தில் அமைக்கப்பட உள்ளன. இந்த மேம்பாலம் முழுவதும் லாஞ்சர்ஸ் எனப்படும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்படுகிறது.
இதற்காக 2 கான்கிரீட் தூண்களில் அதிக திறன் கொண்ட கிரேன்கள் வைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ள கான்கிரீட் தளம் கொண்டு வரப்பட்டு பொருத்தப்படுகிறது.
இதன்மூலம் போக்குவரத்து பாதிப்பு இன்றி மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மொத்தம் 305 கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். இதில் இதுவரை 20 தளங்கள் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இதுதவிர 5 இடங்களில் சுரங்கப்பாதையும் அமைக்கப்பட உள்ளன." என்றனர்.