சென்னிமலை 23 லட்ச த்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுக்கோட்டை மாவட்டம் கண்ணங்குடியை சேர்ந்த கார் டிரைவரான ராஜசேகர் (32) என்பவர் அறந்தாங்கி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 5-ந் தேதி சரண் அடைந்திருந்தார்
June 14, 2023
0
சென்னிமலை அருகே ஈங்கூரில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் சத்தியமூர்த்தி என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 23-ந் தேதி மர்ம நபர்கள் இவரை காருடன் கடத்தி சென்று நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.23 லட்ச த்தை கொள்ளையடித்து சென்றனர்.இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேரை சென்னிமலை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுக்கோட்டை மாவட்டம்கண்ணங்குடியை சேர்ந்த கார் டிரைவரான ராஜசேகர் (32) என்பவர் அறந்தாங்கி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 5-ந் தேதி சரண் அடைந்திருந்தார்.இவரை சென்னிமலை போலீசார் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தி 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். பின்னர் சென்னி மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் ராஜசேகரை அவரது சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி னார்கள்.அப்போது அவர் தான் கொள்ளையடித்த பணத்தில் நண்பர்களுக்கு கொடுத்து விட்டு மீதி ரூ.1 லட்சத்தை தனது சகோதரியான திருச்சி அருகே கோவில் வீரக்குடியை தமிழரசி என்பவரிடம் கொடுத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ராஜசேகரின் சகோதரி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி அவரி டம் இருந்து ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.தற்போது ராஜசேகருக்கு போலீஸ் காவல் முடிந்ததால் போலீசார் ராஜசேகரை மீண்டும் பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் கொள்ளை யடிக்கப்பட்ட பணம் மற்ற யாரிடம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
Tags