கோவை மாநகர காவல்துறை
V. பாலகிருஷ்ணன், காவல் ஆணையர், கோவை மாநகரம்.கோவை மாநகர ஆயுதப்படை கவால் துறை மைதானத்தில் நடைபெற்றது,
கோவை பாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் பனநலனையும், உடல் நலனையும் மேம்படுத்தும் நோக்கில் கோவை மாநகர காவல் ஆணையர் V. பாலகிருஷ்ணன், வழங்கிய அறிவுரைகளின் படி, உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறையும், உலக சமுதாய சேவா சங்கமும், முன்னாள் காவல் துறை அதிகாரிகள் சங்கமும் இணைந்து காவலர்களுக்கு "யோகா பயிற்சி" வகுப்பு நடத்தினார்கள்.
மேற்படி உலக யோகா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட யோகா பயிற்சி வகுப்பில் ஆயுதப்படை, தாலுக்கா காவல் நிலையங்கள், சிறப்புப்பிரிவுகள், பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்கள், பயிற்சி காவலர்கள் மற்றும் ஊர் காவல்படையினர் உட்பட 650-ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இப்பயிற்சியின் பொழுது காவலர்களுக்கு காவல்துறை கற்றுக்கொடுக்கப்பட்டது. பணிக்கு உகந்த யோகா பயிற்சிகள்மேற்படி யோகா பயிற்சி வகுப்பிற்கு பின் கோவை மாநகர காவல் ஆணையர்
V. பாலகிருஷ்ணன், பேசியது:
யோகா செய்வதினால் மனிதனின் மனதிற்கும், உடலுக்கும் ஏற்பட கூடிய நன்மைகள் குறித்தும், காவல் துறையினருக்கு யோகா எவ்வளவு முக்கியதுவம் வாய்ந்தது என்பது குறித்தும் பேசி, அனைத்து காவல்துறையினரையும் யோகா பயிற்சி செய்ய ஊக்கமளித்தார்.
மேற்படி காவலர்களுக்குான யோகா பயிற்சி வகுப்பில் கோவை மாநகர காவல் ஆணையர் V. பாலகிருஷ்ணன், தலைமையில், கோவை காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் சிட்ரிக் இம்மானுவேல் , ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் A. சேகர் , முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்கத்தை சார்ந்த Rtd. DSP வெள்ளிங்கிரி , Rtd. SP திரு. ரத்தினம் , Rtd. ADSP முனைவர். திரு. நாகராசன் அவர்களும், உலக சமுதாய சேவா சங்கத்தை சார்ந்த திரு. செல்வராஜ் அவர்களும், முனைவர் சந்தானகிருஷ்ணன் , மோட்டார் வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் K. கோவிந்தராஜூ, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் M. பிரதாப்சிங் மற்றும் இருபால காவல் ஆளுநர்களும் கலந்துகொண்டார்கள். இதற்கான ஏற்பட்டினை கோவைஆயுதப்படை காவல் உதவி ஆணையர் A. சேகர் சிறப்பாக செய்திருந்தார்