இதனை அடுத்து பாலத்தில் அரிசி கொட்டி இடத்தில்சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விழிப்புணர்வு பலகை வைக்கச் சொல்லி இதுபோன்று தவறுகளை செய்ய மாட்டோம் என்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வைத்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து பள்ளிபாளையம் மேம்பாலத்தில் இருந்தபடி 2 பேர் இறைச்சி கழிவுகளை காவிரி ஆற்றில் கொட்டும்
June 14, 2023
0
ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து பள்ளிபாளையம் செல்லும் மேம்பாலத்தில் இருந்தபடி 2 பேர் இறைச்சி கழிவுகளை காவிரி ஆற்றில் கொட்டும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. சரக்கு ஆட்டோவில் மூட்டை, மூட்டையாக இறைச்சி கழிவுகளை கொண்டு வந்த 2 பேர் ஆற்றில் ஓடும் தண்ணீரில் கழிவுகளை கொட்டினர். இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தொிவித்து வந்தனர். இந்த நிலையில் இரு மாவட்ட காவல்துறையினர், பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகளின் முயற்சியால் அந்த வாகன ஓட்டியை விரைவில் கண்டுபிடித்து விசாரணை நடத்திய பொழுது கொட்டியது கோழிக் கழிவு இல்லை மழையில் நனைந்த அரிசி என்றும் ஆற்றில் போட்டால் மீன்களுக்கு உணவாக இருக்கும் என்ற எண்ணத்தில் போட்டுவிட்டதாகவும்தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Tags