ரயிலில் திடீர் சோதனை ட்ராவல் பேக் ஆகிய 2 பேக்குகளை சோதனை சேலத்தில் சுமார் 19 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
June 14, 2023
0
சேலம்:ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஏட்டுக்கள் அசோக்குமார், இசையரசு ஆகியோர் இன்று காலை பொம்மிடி முதல் சேலம் வரை ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது எஸ் 4 கோச், 74-வது சீட்டுக்கு அடியில் இருந்த ஷோல்டர் பேக் மற்றும் ட்ராவல் பேக் ஆகிய 2 பேக்குகளை சோதனை செய்தனர். அதில், சுமார் 19 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை போலீசார் கைப்பற்றினர். அதனை கொண்டு வந்த திருச்சி ராம்ஜி நகர் பகுதியை விமலா என்ப வரை விசாரித்ததில், அவர் விஜயவாடாவில் இருந்து ஈரோடு வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து தெரியவந்தது. தொடர் விசாரணையில், விமலா மீது எடமலை பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவரையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவையும், மேல் நடவடிக்கைக்காக சேலம் ரெயில்வே போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.
Tags