ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின் மூலம் 15,000 மரக்கன்றுகள்சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் அமைந்துள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான
7 ஏக்கர் நிலத்தில் ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின் மூலம் 15,000 மரக்கன்றுகள் 49 நாட்களில் ரூ : 9.10 லட்சம் திட்ட செலவில் நடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மரக்கன்றும் நீரைப் பெறும் முறையில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. பசுமையான மரங்கள் நிறைந்த ஈரோட்டை உருவாக்கும் முயற்சியில் முதற்கட்டமாக இத்திட்டத்தை ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் பணி நிறைவு விழா சென்னிமலை திருக்கோவில் பகுதியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட திட்ட கண்காணிப்பு அலுவலர் G.பிரகாஷ் கலந்து கொண்டார். ஈரோடு இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி அவர்கள் மற்றும் உதவி ஆணையர் மொ.அன்னக்கொடி முன்னிலை வகித்தனர். ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் தலைவர் எம்.சின்னசாமி , துணைத்தலைவர் சிடி.வெங்கடேஸ்வரன் , செயலாளர் எஸ்.கணேசன் , சுற்றுச்சூழல் குழு தலைவர் B. தர்மராஜ் , உதவித் தலைவர் A. யோகேஷ் குமார் , ஓட்டப்பாறை ஊராட்சி தலைவர் சுமதி தங்கவேல் மற்றும் அரசு அலுவலர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.