காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும்.அக்னி நட்சத்திர சமயத்தில் சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும்.
பேச்சு வழக்கில் கத்திரி வெயில் கொளுத்துகிறது என்று சொல்வதைக் கேட்டிருப்போம். வெயில் அதிகமாக இருக்கும் என்பதால்தான் இந்த நேரத்தில் பள்ளிகளுக்குக் கூட விடுமுறை அளிக்கிறார்கள்.
.நமது வானிலை சார்ந்த அறிவியலின் படி அக்னி நட்சத்திரம் கத்திரி வெயில் என்ற வார்த்தையே கிடையாது.
அக்னி நட்சத்திரம் என்ற வார்த்தையை எந்த நாட்டு வானிலையிலும் பயன்படுத்த மாட்டார்கள்.
இந்த வார்த்தையை இந்து மதத்தில் பஞ்சாங்கத்தில் தான் பயன்படுத்து வார்கள்.
அக்னி நட்சத்திரம் என்ற வார்த்தை வந்ததற்கு இந்து மதத்தில் பல புராணங்கள் உள்ளது. புராண வரலாறுபடி 21 நாட்கள் அக்னி நட்சத்திர காலமாகும்.
மற்றபடி அக்னி நட்சத்திரம் என்ற வார்த்தையை வானிலை மையம் பயன்படுத்தாது.மே மாதம் வெப்பம் அதிகரிக்கும்தான். இது, ஒவ்வொரு ஆண்டும் நிகழும் இயல்பான செயல்.
அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் சித்திரைமாத பிற்பகுதி, வைகாசி முதல் பகுதி நாட்களை மக்கள் பின் ஏழு, முன்னேழு என கூறி கணக்கிடுவது வழக்கம்.
இந்துமத நம்பிக்கையின் அடிப்படையில் அக்னி நட்சத்திரம் இன்று ஆரம்பம்.
ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின்படி, பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயண காலமே அக்னி நட்சத்திரம் எனவும், கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
*தமிழகத்தில் இந்த ஆண்டின் வெப்பநிலை எவ்வாறு இருக்கும்?*
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்கள் அக்னி நட்சத்திர காலமாகும்.
இந்தாண்டு அக்னி நட்சத்திர காலத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என்பதால் மே 13 ம் தேதி வரை தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்காது.
மே 8 ம்தேதி தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது இக்காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகரும். இது புயலாக மாறும் இப்புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.
இப்புயல் தமிழகத்தில் உள்ள ஈரப்பதத்தை இழுக்கும் என்பதால் மே 13 ம்தேதிக்கு பிறகு தமிழகத்தில் வெப்பத்தின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் குறிப்பாக உள்மாவட்டங்கள் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக காணப்படும்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை நாளை முதல் மழை குறையும்.
மே 13 ம் தேதிக்கு பிறகு படிப்படியாக வெப்பநிலை உயர்ந்தாலும் தென் மாவட்டங்களில் அனல் காற்று வீசும் அளவுக்கு வெப்பநிலை உயராது. ஏனெனில் வங்க கடலில் உருவாகும் புயல் சின்னமானது அரபிக்கடல் ஈரப்பதத்தை தமிழகம் வழியாக இழுக்கும் என்பதால் கன்னியாகுமரி தென்காசி நெல்லை மாவட்டங்களில் இதமான சூழல் நிலவும்.
தென் மாவட்டங்களில் மேற்கு காற்று வீச தொடங்கும் என்பதால் கோடைகாலமே இல்லாத மாவட்டங்களாக திகழும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பகல் நேர வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும்.
குறிப்பாக கயத்தாறு கோவில்பட்டி கழுகுமலை நெல்லை மாநகரம் எட்டயபுரம் ஆகிய இடங்களை தவிர பிற இடங்களில் வெப்பநிலை இயல்பான அளவிலே இருக்கும்
காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும்.
வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள மாவட்டங்களில் பொதுமக்களுக்கு தலை வலி உடல் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
கத்திரி வெயில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும் நுங்கு, இளநீர் போன்றவற்றையும் உட்கொண்டு உடல் வெப்பத்தை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளுங்கள்.