அதனை தொடர்ந்து இன்று 08.4.2023 சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் மகா கணபதி ஹோமம் கோயில் வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பின்பு சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் முதல் கால வேள்வி யாகம் காஞ்சிக்கோயில் ஈசான சிவப்பிரகாச சிவாச்சாரியார் குருக்கள் தலைமையில் வேள்வி யாகம் சிறப்பாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நாளை 9.04.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் 2ம் கால வேள்வி யாகம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் மூன்றாம் வேள்வி யாகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து திங்கட்கிழமை 10.4.2023 காலை 8.00 மணியளவில் நான்காம் கால பூஜை நடைபெற உள்ளது.அதனைத் தொடர்ந்து 9.00 மணியளவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்வுகளுக்கு சிவகிரி ஆதீன குலகுரு அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்திக் கொடுக்க உள்ளார்கள்.விழா ஏற்பாடுகளை காஞ்சிக்கோவில் ஸ்ரீகுமரன் மலை நலச் சங்கம் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.