விழாவில் தேசிய தலைவர் விஸ்வேஷ் குல்கர்னி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து
சி. தேவராஜன் தலைவர் & MD, URC குழுமநிறுவனங்கள்,எம். சின்னுசாமி, தலைவர் & எம்.டி., அக்னி ஸ்டீல்ஸ் லிமிடெட்,பி. ஒலிவண்ணன் நிர்வாக இயக்குநர், தண்டபாணி ஸ்டீல் (பி)லிமிடெட்,
தேவன் தலைவர்-HR & நிர்வாகம், தி சென்னை சில்க்ஸ்
பொதுச்செயலாளர் எம்.எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
இந்த அமைப்பு மனித வள மேம்பாட்டு மேலாளர்களுக்காக இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் அமைப்பாகும். இந்தியாவில் 54 சேப்டர்கள் உள்ளன. 12 ஆயிரம் மனித வள மேம்பாட்டு மேலாளர்கள், முதன்மை மேலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஈரோட்டில் புதிய சேம்பர் தொடங்கப்பட்டது. இதில் 100 பேர் உறுப்பினர்களாக இணைந்து இருக்கிறார்கள். ஈரோடு தலைவராக மோகன் செயல்படுவார். இந்த அமைப்பு மூலமாக அனைத்து மனிதவள மேம்பாட்டு மேலாளர்கள் எந்தவொரு ஒளிவு மறைவு இல்லாமல் தங்களது திறமைகளை கற்று கொடுப்பார்கள். இதன் மூலமாக தாங்களும் கற்றுக்கொண்டு மற்றவர்களுக்கும் கற்று கொடுக்க முடிகிறது. ஒரு நல்ல விஷயத்தை மென்மேலும் செய்வதுதான் எங்களது நோக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அளவில் 55 chapter களை கொண்டு 11200 க்கு மேல் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளை வழி நடத்திவரும் நேஷனல் இ்ஸ்டிட்யூட் ஆஃப் பெர்சுனல் மேனேஜ்மென்ட் (NIPM) தற்போது ஈரோடு மாவட்டத்தில் சுமார் 100 நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைத்து Nipm erode chapter ஐ சென்ட்ரல் லயன்ஸ் ஹாலில் துவங்கி வைக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக யு.ஆர்.சி நிறுவனத்தின் தலைவர் தேவராஜன், டி.எம்.டபிள்யு நிறுவனத்தின் தலைவர் சண்முகம், தண்டபாணி ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குநர் ஒளிவண்ணன் மற்றும் டி.எம்.டபிள்யு நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இத்துடன் ஈரோடு சேப்டரின் தலைவராக ராம்ராஜ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மோகன், செயலாளராக பூம் ஹெச்.ஆர் சொல்யூஷன் நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக், பொருளாளராக செயின்ட் கோபைன் நிறுவனத்தின் மனித வளத்தலைவர் ஹேமா நந்தினி, துணை தலைவர்களாக சேதுபதி, கார்த்திகேயன் மற்றும் இணைச் செயலாளராக எஸ்.கே.எம் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். கூடவே உறுப்பினர்களான செந்தில், அருள், பிரியதர்ஷினி, திலக்ராஜ், செந்தில்குமார், சுரேஷ், கார்த்திக் ஆகியோர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். மேலும் Nipm யின் தேசிய தலைவர் விஸ்வேஷ் குல்கர்னி, தேசிய செயலாளரான ஹெச் ராஜா மற்றும் கோவை, சென்னை, கர்நாடகா, ஓசூர், ஆந்திராவில் இயங்கி வரும் NIPM தலைவர்கள் கலந்துகொண்டு விழாவினை மேலும் சிறப்பித்தனர். இந்த குழுவில் மனிதவள மாணவர்கள், கல்லூரி தலைவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அனைத்து நிறுவனங்களிலும் இரண்டாவது தூணாக இருக்கும் HR அதிகாரிகளுக்கு இதுபோன்ற குழு மிகப்பெரிய வரப்பிரசாதம்.