மாமனாரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மருமகளை தகாத வார்த்தைகளால் பேசி வீட்டுப் பொருட்களை வெளியே உதவி செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு...
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த அம்மன் புதூரைச் சேர்ந்தவர் நிம்மி, திருமணம் ஆகி கூட்டுக்குடும்பமாக கணவன் வீட்டாருடன் வசித்து வந்த நிலையில் கணவன் வீட்டாருக்கும் நிம்மிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது...
இந்த நிலையில் தகராறு முற்றிய நிலையில் நிம்மியின் மகள் கல்லூரி மாணவி தீபிகாவை கணவனின் தம்பி ராஜா என்பவர் கல்லால் தாக்கிய நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்தார்..
இது குறித்து காவல் நிலையத்தில் நேரிலும் தபாலிலும் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை...
தொடர்ந்து நேற்று கணவன் குடும்பத்தாருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது... அதில் கடுமையான தாக்குதலுக்கு உண்டான பின்னர் உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறி கொடுமுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றேன்...
அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் கற்பகம் மற்றும் முதல் நிலை காவலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் மாமனார் மாமியார் மட்டும் விசாரித்து என்னை தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமல்லாமல் என் வீட்டு சாமான்களை வெளியே எடுத்து வீசியும் ஜெயிலுக்கு போக வேண்டி இருக்கும் என காவல்துறையினர் மிரட்டுகின்றனர்...
திடீரென மாமனார் மாமியார் வீட்டில் இருந்து சாமான்களை வெளியே எடுத்து வீசுவதால் எங்கே போவது என்று தெரியாமல் நள்ளிரவில் சாலையோரமாக குடும்பத்துடன் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது...
ஒருதலை பட்சமாக செயல்பட்டது மட்டுமின்றி என் வீட்டு சாமான்களை வெளியே எடுத்து வீசிய காவல்துறையினர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்...