Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டம் தாளவாடி மல்லிகார்ஜுனா சுவாமி கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் தாளவாடி மல்லிகார்ஜுனா சுவாமி கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது.  வில்வர்ச்சனையுடன் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து இரவு மல்லிகார்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய–பட்டு மலர்களால் அலங்க–ரிக்கப்பட்டு இருந்தது.பின்னர் சாமி உற்சவர் சிலை மேளதாளங்களுடன் ஆற்றாங்கறைக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து முக்கிய வீதிகளில் வீதி உலாவாக ஒசூர் ரோடு, தலமலை ரோடு, சத்திரோடு வழியாக எடுத்து செல்லப் பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப் பட்டு இருந்த குண்டத்தில் பூசாரிகள் 5 பேர்மட்டும்குண்டம்இறங்கினர்.அதேபோல் தொட்டகாஜணூர் மண்டேசாமி கோவில் குண்டம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு புலி ஆட்டத்துடன் விழா தொடங்கியது. இக்கோவிலில் மண்டேசாமி, பீரேஸ்வரசாமி, லட்சுமிதேவி, மாரியம்மன், சவுடேஸ்வரி, மசனம்மாள், ராக்காயி அம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன.இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மலர்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது. பின்னர் மேளாதாளங்களுடன் சுவாமிகள் வீதி உலாவாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் ஆற்றாங்கரை சென்று சிறப்பு பூஜைகள் செய்ய ப்பட்டு மேளதாளம் முழங்க தொட்டகாஜணூர் அனைத்து வீதிகளில் திரு வீதி உலாவாக எடுத்து செல்லப்பட்டது.அப்போது பக்தர்கள் சுவாமிக்கு மாலை அணிவித்து தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனர். ஆர்.சி. வீதியில் 400 கிலோ பூக்களால் மலர் பாதத்தில் சுவாமிகளை அழைத்து சென்றனர். காலை 9 மணியளவில் சுவாமிகள் கோவிலை வந்தடைந்தது. பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த 30 அடி உள்ள குண்டத்தில் 7 பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதி இல்லை. பக்தர்கள் குண்டத்தை தொட்டு கும்பிட்டனர் .விழாவில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர், மைசூர், சிக்கொலா, அட்டுகுளிபுரம் என பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தாளவாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வடிவேல்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.