பிடிபட்ட மூன்று பேருக்கும் கஞ்சாவை சப்ளை செய்யும் மொத்த வியாபாரிகள் 6 பேரையும் தந்திரமாக வரவழைத்து அவர்களிடமிருந்த 7 கிலோ கஞ்சாவையும் கடத்தலுக்கு பயன்படுத்திய காருடன் கைது செய்தனர் .....
கோபியை அடுத்த டி.ஜி.புதூர் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக பங்களா புதூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் DG புதூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது அந்த காரில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து காரில் கஞ்சாவை கடத்தி வந்த சதீஸ்(19), சத்தியமங்கலம் பிரபு(26), சிக்கரசம்பாளையம் ரஞ்சித்(26) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் வரப்பள்ளம் என்ற இடத்தில் பவானி பகுதியை சேர்ந்த சில மொத்த வியாபாரிகளிடமிருந்த விற்பனைக்காக கஞ்சாவை வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பங்களாப்புதூர் போலீசார், கஞ்சாவை மொத்தமாக விற்பனை செய்யும் கும்பலை பிடிப்பதற்காக ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஸ் மூலமாக ராஜசேகர், கிருபாகரன், பிரகாஷ் (எ) ஜெயபிரகாஷ் என்ற கஞ்சா வியாபாரிகளொ தொடர்பு கொண்டு மீண்டும் விற்பனை செய்ய கஞ்சா தேவை என கூறி உள்ளனர்.
அதை நம்பிய ராஜசேகரன், கிருபாகரன் மற்றும் பிரகாஷ் (எ) ஜெயபிரகாஷ் ஆகிய மூன்று பேரும் இரண்டு ஸ்கூட்டர் மற்றும் ஒரு பைக்கில் மீண்டும் வரப்பள்ளம் அருகே உள்ள இரட்டை பாலம் அருகே 5 கிலோ கஞ்சாவுடன் காத்திருந்தனர்.
அவர்களிடம் கஞ்சாவுடன் வந்திருப்பதை உறுதி செய்த பங்களாப்புதூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் சுரேஷ் மற்றும் தனிப்படை போலீசார் உடனடியாக அங்கு சென்று கஞ்சாவுடன் காத்திருந்தவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது மூன்று பேரும் தப்பியோட முயற்சித்த போது அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த பின்னர் அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனங்களை சோதனை செய்த போது அதில் மொத்தமாக 5 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து ராஜசேகரன், கிருபாகரன் மற்றும் பிராகாஷ் (எ) ஜெயபிரகாஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களுடம் நடத்திய விசாரணையில்; பவானியை சேர்ந்த அரைப்பல் செந்தில் (47) என்ற பிரபல கஞ்சா வியாபாரியிடமிருந்து கஞ்சாவை விற்பனைக்காக வாங்கி வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அரைப்பல் செந்திலை பிடிப்பதற்காக பங்களாபுதூர் போலீசார் பவானி சென்ற போது ,செந்தில் தலைமறைவாகி விட்டாதாக தெரிகிறது
இதனையடுத்து பிடிபட்ட சதீஸ், பிரபு, ரஞ்சித், ராஜசேகரன், கிருபாகரன் மற்றும் பிரகாஷ் (எ) ஜெயபிரகாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 கிலோ கஞ்சா, மற்றும் 6 செல்போன்கள், மூன்று இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் ரூ 17 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.