கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரின் மீது மோத வந்த தனியார் பேருந்தை வழிமறித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அரிவாளால் வெட்ட முயன்ற இளைஞர் கைது..
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள சூரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பரணிதரன் இவர் தனது சொந்த வேலை காரணமாக அவிநாசி சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் நம்பியூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது மொட்டனம் அருகே வந்த தனியார பேருந்து ஒன்று பரணிதரன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதுவது போல முந்தி சென்றுள்ளது.
இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற பரணிதரன் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாக இருந்த நிலையில் சாதுர்யமாக விபத்திலிருந்து தப்பித்தார்.
இதனையடுத்து தன் மீது மோத வந்த தனியார் பேருந்தை பின் துரத்திச்சென்று தனது வாகனத்தை குறுக்கே நிறுத்தி பேருந்தை இயக்கிய ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் தகறாரில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பேருந்தின் நடத்துனர் பிரகாஷ் என்பவர் பரணிதரனை தாக்கியதும் ஆத்திரமடைந்த பரணிதரன் தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த நீளமான அரிவாளை கையில் எடுத்து நடதுனர் பிரகாசை வெட்ட முயற்சித்த போது பிரகாஷ் அந்த அரிவாளை தடுத்துள்ளார் இதனால் பிரகாஷின் கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது ..
இதனையனுத்து அங்கிருந்த பொதுமக்கள் பரணிதரனிடமிருந்த அரிவாளை பிடுங்கி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வரப்பாளையம் போலீசார் அரிவாளை வைத்து மிரட்டிய பரணிதரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் இந்த வீடியோ தற்போது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.