தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி வீரப்பன்சத்திரம் அருகே உள்ள சி.என்.சி கல்லூரியில் நடைபெற்றது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த புகைப்பட கண்காட்சியில், தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்ட, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அரசு பள்ளிகளில் துவங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுங்கு விற்பனை வண்டிகள் வழங்கியது உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இக்கண்காட்சியையொட்டி, வேளாண்மை உழவர்நலத்துறை, சமூக நலன் மகளீர் உரிமைத்துறை உட்பட அனைத்து துறைகளின் பணி விளக்கம் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
ஓராண்டு கடைக்கோடி தமிழா்களின் கனவுகளைத் தாங்கிபுகைப்படக் கண்காட்சி செய்தி மற்றும் புகைப்படங்கள் - 5 வது நாள்