உலகப் புகழ்பெற்ற தென்னக காசி பைரவர் திருக்கோவில் கர்ப்ப கிரகத்தில் அமைந்துள்ள ஸ்வர்ண லிங்கத்திற்கு மக்களே தங்களது திருக்கரங்களால் நெய் அபிஷேகம் செய்யலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு அருகே ராட்டை சுற்றிபாளை யத்தில் உலகத்திலேயே அதிக பட்சமாக 36 அடி உயர பைரவர் சிலையோடு பைரவர் ஆலயம் நிர்மாணிக் கப்பட்டுள்ளது .
இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த மார்ச் 13ஆம் தேதி நடைபெற்றது .இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இங்குள்ள சொர்ணலிங்கம், ஹிமாலய பகுதியில் பல வருடங்கள் பூஜிக்கப்பட்டு அதற்குப்பின் இக்கோயிலில் சித்த புருஷர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பொதுமக்களே கர்ப்ப கிரகத்திற்குள் சென்று ஸ்வர்ணலங்கத்தை வணங்கி தங்களது கரங்களாலேயே நெய் அபிஷேகம் செய்து சுவாமியின் அனுகிரகத்தை பெறலாம் என பைரவர் ஆலயத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விஜய் சுவாமிஜி செய்தியாளர்களிடம் பேசும்போது,
""தமிழகத்திலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் பைரவர் திருக்கோவில் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்றும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்"" என்றும்
இங்குள்ள அபூர்வ சர்வ சக்தி படைத்த சொர்ண லிங்கத்தை மக்கள் தங்களது மேனியில் படும்படி தொட்டு வணங்கி நெய் அபிஷேகம் செய்தால் நாம் எண்ணியதெல்லாம் ஈடேறும் என்றும் நாம் செய்யும் முயற்சிகள் அனைத்தும் நமக்கு கைகூடும் என்றும் தெரிவித்தார்.