ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அநியாயமான சமையல் கேஸ் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ஒதுக்கிய 100 நாள் வேலை திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.60 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கியது, ஏழைகளுக்கான உணவு மானியத்தை ரூ. 1 லட்சம் கோடியாக வெட்டியது, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகை ஆகிய ஒன்றிய நிதிநிலை அறிக்கையினைக் கண்டித்து நகர செயலாளர் பி.சுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரிமுத்து, ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். நகரக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.