ஈரோடு மார்ச் 4:
வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக தமிழகத்தை விட்டு வெளியேறுவதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சித்திக் கேட்டுக்கொண்டார் அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியது : திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வந்த வீடியோ போலியானது என காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளார் ஆனால் அச்சம் காரணமாக ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் அத்தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர் அவர்களில்சுமார் 15,000 பேர் தங்கள் ஊருக்கு செல்ல விரும்புகின்றனர் அவர்களை நாங்கள் சமாதானப்படுத்தி வருகிறோம் அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க எஸ்பி மற்றும் கலெக்டரிடம்கேட்டுக் கொண்டுள்ளோம் பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பூர் கலெக்டர் மற்றும் எஸ் பி ஏற்கனவே அவர்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர் இன்று தமிழகத்தில் கல்வி அறிவு அதிகரித்துள்ளது எனவே உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபட நம் இளைஞர்கள் முன் வரவில்லை அத்தொழில்களில் மட்டும் வட மாநிலத்தவர்கள் பணிபுரிகின்றனர் அவர்கள் ஒன்றும் இங்கு நிரந்தரமாக தங்கி முதலாளிகளாக முடியாது ஆனால் சில அரசியல் கட்சிகள் குறிப்பாக சீமான் போன்றவர்கள் தங்கள்சுயநலத்திற்காக அவர்களுக்கு எதிராக கருத்துக்களை பரப்பி வருகின்றனர் தபீகார்சட்டமன்றத்திலும் ஒரு எம்எல்ஏ தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து பேசி உள்ளார் இதுவும் அவர்களுடைய அச்சத்தை அதிகரித்து உள்ளது ஆனால் இன்று கடினமான உடல் உழைப்பு தொழிலில்உள்ளவர்களில் 80% பேர் வட மாநிலத்தவர் அவர்கள் வெளியேறினால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கும் ஏற்கனவே கடன் வாங்கி பல்வேறு தொழில்களை செய்து வருகிறோம் தொழில்கள் முடங்கும் நிலை உருவாகும் எனவே வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் அவர்களிடையே பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை மேலும் வளர்க்க வேண்டும் இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார்