விசைத்தறிகூட்டமைப்புமுதல்வருக்கு நன்றி..
விசைத்தறிகளுக்கு 750லிருந்து 1000 யூனிட்டாகவும், கைத்தறிக்கு 200லிருந்து 300 யூனிட்டாகவும் இலவச மின்சாரத்தை உயர்த்தியும், யூனிட்டுக்கு மின் கட்டணம் ரூ.1.40ல் இருந்து 70 பைசாவாக குறைக்கப்பட்டதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு விசைத்தறி கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், ஊடக ஒருங்கிணைப்பாளர் கந்தவேல் நன்றி தெரிவித்துள்ளனர். . ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சனிக்கிழமை காலை கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் இணைந்து பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அரசு வழங்கிய சலுகைகளைக் கொண்டாடினர். அவர்கள் கூறியது:.கூட்டமைப்பு கோரிக்கை மற்றும் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி இச்சலுகைகள் வழங்கப்படடுள்ளது. இது மாநிலத்தில் உள்ள 6 லட்சம் விசைத்தறிகளுக்கு உதவும் மற்றும் கடும்நெருக்கடியில் இருந்த இத்துறைக்கு புத்துயிர் அளிக்கும். இது தொடர்பாக, திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகவும், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வரும் மார்ச் 12-ஆம் தேதி அவருக்கு பாராட்டு விழா நடத்த அனுமதி கோர உள்ளதாகவும் தெரிவித்தனர். அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, முத்துசாமி, எம்.பி.சாமிநாதன், எம்எல்ஏ ஈஸ்வரன் மற்றும் துறைச் செயலாளர் ஆகியோருக்கும் இச்சலுகைகளை பெற்று தந்ததற்கு நன்றி தெரிவித்தனர்