.ச.சந்தோஷினி சந்திரா மற்றும் உதவி ஆட்சியர் (பயிற்சி) என்.பொன்மணி ஆகியோர் கலை நிகழச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு ஓராண்டில் அரசின் அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து தமிழ்நாடு அரசின் அரும்பணிகள், திட்டங்கள் மற்றும் சாதனைகள் உள்ளடக்கிய "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழர்களின்; கனவுகளைத் தாங்கி" என்ற தலைப்பில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து புகைப்படக்கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஈரோடு சத்தி சாலையில் அமைந்துள்ள சிக்கைய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் 18.03.2023 அன்று தொடங்கி இன்று 27.03.2023 வரை 10 நாட்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தது.
மேலும், இக்கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி, மகளிர் சுய உதவிக்குழுவின் தெருவோர உணவகம், சிறுதானியம், மற்றும் பல்வேறு உணவுடன் கூடிய உணவுத்திருவிழா, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப் பை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு, மாணவர்களுக்கு பயிற்சி முகாம்கள், பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, வேளாண்மை - உழவர்நலத்துறை,தோட்டக்கலைத்துறை, சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, மகளிர் திட்டம், கைத்தறித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த கருத்துக்காட்சி, உள்ளுர் கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள், மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், கருத்தரங்குகள், மற்றும் பட்டிமன்றங்கள், வணிகக்கடைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வந்தது. தினமும் சுமார் 5000 நபர்கள் என 10 நாட்களில் மொத்தம் 50,000 நபர்களுக்கு மேல் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை பார்த்து பயனடைந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதி நாளான (27.03.2023) மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா மற்றும் உதவி ஆட்சியர் (பயிற்சி) என்.பொன்மணி ஆகியோர் பல்வேறு துறைகளின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டனர்.
தொடர்ந்து, பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், மேலும், இந்த கண்காட்கிகளில் சிறப்பான முறையில் அரங்குகள் அமைத்து முதல் மூன்று இடங்களை பிடித்த 1)பள்ளிக்கல்வித்துறை, 2) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, 3) ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் ஆகிய துறைகளின் அரங்குகளுக்கு பாராட்டு சான்றிதழகளையுனம் வழங்கி பாராட்டினர். மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கைத்தறித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக, பள்ளிக்கல்வித்துறையின் சிறந்த திட்டமான இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஒன்றியத்திற்கு 2 நபர்கள் வீதம் 14 ஒன்றியத்தில் 28 நபர்களுக்கு சிறந்த தன்னார்வலர்களுக்கான விருதை மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா மற்றும் உதவி ஆட்சியர் (பயிற்சி) என்.பொன்மணி ஆகியோர் வழங்கினார்கள், மேலும் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மரக்கன்றுகள், உரம் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த 10 நாட்கள் நடைபெற்ற புகைப்படக்கண்காட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் பொது மக்களுக்காக அரங்கில் அமைக்கப்பட்டிருந்து எக்ஸ்ரோ கருவி மூலம் சோதனை செய்து 75 நபர்கள் சிகிச்சை பெற்று மேலும் சிலர் மேற்சிகிச்கைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். மேலும், இரத்தம் அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை ஆகியவற்றை நாளொன்றுக்கு 150 நபர்கள் வீதம் பரிசோதனை செய்து பயன்பெற்றுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் காயத்ரி,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் பூங்கோதை, துணை இயக்கநர் (குடும்பநலன்) மரு.ராஜசேகரன், மாவட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.செந்தில்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கலைமாமணி (விளம்பரம்), முதல்வர் (சிக்கய்ய நாயக்க கல்லூரி) மனோகரன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.