Type Here to Get Search Results !

இளைஞர்களுக்கான வாழ்வாதார பயிற்சிகள் கையேடு;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார்

இளைஞர்களுக்கான வாழ்வாதார பயிற்சிகள் கையேடு;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார் இளைஞர்களுக்கான வாழ்வாதார பயிற்சிகள் கையேட்டை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார். இளைஞர்களுக்கான வாழ்வாதார பயிற்சிகள் கையேட்டை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டார். வாழ்வாதார பயிற்சிகள் ஈரோடு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் சார்பில் இளைஞர்களுக்கான வாழ்வாதார பயிற்சிகள் அடங்கிய கையேடு வெளியீட்டு விழா ஈரோட்டில் நடந்தது. விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி கையேட்டை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இளைஞர்கள் சிறந்த முறையில் சுய வேலை வாய்ப்பு பயிற்சி பெறுவதற்கு வசதியாக 
இதில் அனைத்து திறன் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இ.டி.ஐ.ஐ. தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், குறு நிறுவன மேம்பாட்டு திட்டம், வாழ்வாதார நிறுவனம் மற்றும் மேம்பாட்டு திட்டம், மகளிர் திட்டத்தின் மூலம் தீன் தயாள் கிராமப்புற இளைஞர்களுக்கான 100 சதவீத வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சி திட்டம், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். 

 கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், தேசிய பால் வள வாரியம், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் குறுகிய கால திறன் பயிற்சி, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் தன்னார்வ பயிலும் வட்டம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டங்கள் உள்பட பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்கள் இந்த வலைத்தள குறியீட்டில் உள்ளன. எனவே இந்த வலைத்தள குறியீட்டை வேலை தேடும் இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி., வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கோவை மண்டல இணை இயக்குனர் ஞானசேகரன், மகளிர் திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி, மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் ராதிகா, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ஜோதி, நந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் வி.சண்முகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.