காங்கேயம் குழும நிறுவனங்கள் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மற்றும் காங்கேயம் இன்ஸ்டடியூட் ஆப் காமர்ஸ் கல்லூரிகளில் மகளிர் தின விழா கல்லூரி வளாகம்,கலாம் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக ராதா மனோகரன், M.A., B.Ed., M.L.I.S., D.M.C.E., M.Sc(psyc), மூத்த முதல்வர் மற்றும் வளாக இயக்குநர். ராஜேந்திரன் நிறுவனங்கள், வடுகபட்டி, ஈரோடு அவர்கள் பங்கேற்று பெண்கள் நலன்,பெண்கள் வளர்ச்சி மேம்பாடு , சமூக சேவை ஆகியவை பற்றி எடுத்துரைத்தார் . பெண்களுக்கு நவீன பாதுகாப்பு அளிக்கும் மின்னணுவியல் கருவிகளை பற்றி எடுத்துரைத்தார் . பெண்கள் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது ஒழுக்கம்,தைரியம்,விடாமுயற்சி ஆகியவை பற்றி எடுத்துரைத்தார். பெண்கள் சக்தி மிகவும் மகத்தானது அதை வேறு எதோடும் ஒப்பிடத் தேவையில்லை என்று எடுத்துரைத்தார். அனைவரையும் அரவணைத்து செல்லும் பக்குவம், அன்பு, பண்பு அனைத்திலும் பெண்கள் சிறந்தவர்கள் என்று கூறினார். மேலும் சிறப்பு விருந்தினர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கினார். கோலப்போட்டி, பேச்சுப்போட்டி , சிறந்த பெண்மணிகள் பற்றிய விளக்கக்காட்சி, கலை மற்றும் கைவினை ஆகிய போட்டிகள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு பேராசிரியை முனைவர் S.சிவசெல்வி அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார் . கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் C.வெங்கடேஷ் அவர்கள் தலைமை தாங்கி விழாவை நடத்தி வைத்தார். பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியை M.யுவராணி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் S.கோபாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் .
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியை R .சரண்யா மற்றும் காங்கேயம் இன்ஸ்டிடயூட் ஆப் காமர்ஸ் கல்லூரியின் பேராசிரியை P.மகாதேவி ஆகியோர் ஆண்டு அறிக்கையை வாசித்தார். விழாவின் இறுதியில் காங்கேயம் இன்ஸ்டிடயூட் ஆப் காமர்ஸ் கல்லூரியின் பேராசிரியை M.அபிநயா அவர்கள் நன்றியுரை வாசித்தார். காங்கேயம் குழும நிறுவனங்களின் தலைவர் N . ராமலிங்கம் அவர்கள், செயலாளர் C. K . வெங்கடாச்சலம் அவர்கள், பொருளாளர் C .K . பாலசுப்ரமணியம் அவர்கள் மற்றும் தாளாளர் S .ஆனந்த வடிவேல் அவர்கள் ஆகியோர் இந்த விழாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.