ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார் இதை அடுத்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கினர்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் EVKS.இளங்கோவனும் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு சுயேட்சிகள் என 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தகுதியில் இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர் அவர்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர். மொத்த வாக்குப்பதிவு 74.79 சதவீதமாகும். பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 15 சுற்றுள்ளாக வாக்கு என்னும் பணி நடைபெற்றது ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதல் சுற்றில் இருந்து 15வது சுற்றின் முடிவுகள் வெளிவரும் வரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது இறுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் EVKS இளங்கோவன் - 110156 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு - 43923 வாக்குகளும் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் - 10827 வாக்குகளும் தேமுதிக வேட்பாளர் எஸ் ஆனந்த் - 1432 வாக்குகளும் நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டாவில் - 798 வாக்குகளும் பதிவாயின மேலும் சுயேட்சை வேட்பாளர்களும் சொற்ப எண்ணிக்கையானவர்கள் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் EVKS இளங்கோவன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டஅதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66233 வாக்குகள் அதிகம் பெற்றார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் EVKS.இளங்கோவன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் வழங்கினார் உடன் ஆட்சியர் மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பலர் உள்ளனர்.