சங்க தலைவரும், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, சங்க செயலாளர் ஆர்.மணியன், துணைச் செயலாளர் ஆர்.ஞானசேகரன், விசைத்தறி மற்றும் பொதுத் தொழிலாளர் சங்க துணைச்
செயலாளர் கே.எம்.ஜெயபாரதி, கட்டடத் தொழிலாளர் சங்க ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் எம்.பாபு உள்ளிட்டோர் பேசினர்.
மேற்கண்ட ஏழு பேரூராட்சிகளின் சங்க கிளைப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:
1) தமிழ்நாடு அரசும், மாவட்ட ஆட்சியரும் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கிடுக:
1948-ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதியத் சட்டத்தின் கீழ் உள்ளாட்சித் தொழிலாளர்களுக்கு தமிழக அரசால் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து அறிவிக்கப்பட்டுள்ளது (அரசாணை எண்: 62, நாள்:11-10-2017). அதன்படி 2022-2023 ஆம் ஆண்டுக்கு அதாவது 1-4-2022 முதல் 31-3-2023 வரையான காலத்திற்கு பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.515/- வீதம் ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், நாளொன்றுக்கு ரூ.501/- மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஈரோடு மாவட்ட ஆட்சியரின் 30-06-2022 தேதிய செயல்முறை ஆணைகள் படியும், ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையரின் 26-12-2022 அறிவுரைப்படியும் மேற்கண்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
ஆகவே, மேற்கண்ட பேரூராட்சி நிர்வாகங்கள் 1-4-2022 முதல் நாளொன்றுக்கு ரூ533/- வீீதம் கணக்கிட்டு 2023 மார்ச் மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
அதோடு, சென்னை, தொழிலாளர் துறை ஆணைைரின் 27-02-2023 தேதிய அறிவிப்பின்படி, 2023-2023 ஆம் ஆண்டுக்கு பேரூராட்சி் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ.533/- வீீதம் அதாவது அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.8000/- மற்றும் அகவிலைப்படி மாதம் ரூ.5848/- ஆக மொத்தம் மாதம் ரூ.15,848/- 1-4-2023 முதல் வழங்கப்பட வேண்டும் என இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
2) பேரூராட்சி தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிடுக!
பேரூராட்சிகளில் திடக் கழிவு மேலாண்மை (தூய்மைப்பணிகள்), குடி நீர் விநியோகம் , தெரு விளக்குப் பராமரிப்பு, பாதாள சாக்கடை திட்டத்துக்காக பணிகளை அவுட் சோர்சிங் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் அரசாணைகளையும், அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசையும், பேரூராட்சிகள் நிர்வாகத்தையும் இக்கூட்டம் வற்புறுத்துகிறது.
3) பணிநிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், கொரோனா கால ஊக்கத் தொகை, குறித்த காலத்தில் ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட ஏஐடியுசி உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பான சமரசப் பேசிசு வார்த்தைகளின் நிறைவாக. ஈரோடு, தொழிலாளர் உதவி ஆணையர் அவர்கள் 26-12-2022 அன்று ஈரோடு மாவட்ட அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்துள்ளதை உடனடியாக செயல்படுத்திட வேண்டுமென இக் கூட்டம் வலியுறுத்துகிறது.
4) பெருந்துறையை நகராட்சியாக தரம் உயர்த்திடுக!
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகவும், நீண்ட காலமாக தாலுக்கா தலைநகராகவும் விளங்கி வருகிற பெருந்துறை நகரம் இரு பேரூராட்சிகளாக செயல்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே, பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் கருமாண்டி செல்லிபாளையம் தேர்வுநிலை பேரூராட்சிகளையும் இணைத்து பெருந்துறை நகராட்சி ஆக்க வேண்டும் என இக் கூட்டம் வற்புறுத்துகிறது.
5) மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்கட்டமாக அனைத்து பேரூராட்சிகளுக்கும் கோரிக்கை மனு அளிப்பதென்றும், கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றும் கூட்டம் தீர்மானிக்கிறது.