ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் வேளாளர் மகளிர் கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவிகள் 14 நாட்கள் உள்விளக்க பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு அருங்காட்சியகத்தில் உள்ள கல்வெட்டுகள், கல் சிற்பங்கள், தோற்பாவைகள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை பராமரிப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியின் நிறைவு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்சி தலைமை தாங்கினார். கல்லூரியின் வரலாற்றுத்துறை கார்த்திகா வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சண்முகவடிவு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் 55 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன