ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி தொட்டபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 46 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை அமைக்கபட்டது.
அந்த கோவிலில் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தாளவாடி அருகே தலமலை தொட்டபுரம் கிராமத்தில் 46 அடி உயர விஸ்வரூப ஸ்ரீ ருத்ர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டது. அந்த கோவிலில்
இன்று கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. காலையில் யாக பூஜைகள்,கணபதி ஹோமம் உள்ளடவை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தீர்த்த குடங்கள் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது மேலும் கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
46 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் சிலையின் முக்கிய அம்சமாக சனீஸ்வர பகவானே தன் பாதத்தில் அமிழ்த்தி உள்ளது போல் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு புனித நீர் ஊற்றி மேலும் மூலிகைகள் பால் தயிர் அபிஷேகம் செய்து மிகச் சிறப்பாக நடைபெற்றது
இந்த கும்பாபிஷேக விழாவில் தாளவாடி சுற்றுவட்டார கிராமங்களான தலைமலை கோடிபுரம் நெய்தாளபுரம் மாவநத்தம் லிட்டர் மளிகை உள்ளிட்ட மலை கிராமங்கள்
சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.