பங்கு தொகையான ரூ.23 லட்சத்தை மீட்டு தர வேண்டும்எஸ்.பி. அலுவலகத்தில் தம்பதிகள் புகார்
ஈரோடு எஸ். பி. அலுவலகத்திற்கு இன்று மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் மகேஸ்வரி என்பவர் வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஈரோடு சம்பத் நகர் பகுதியில் ஆட்டோமொபைல்ஸ் தொழிலை கூட்டாக நடத்தி வருகிறோம்.மேற்படி தொழிலில் பலர் பங்குதாரர்களாக இருந்து வருகிறோம். கடந்த 2009 ஆம் ஆண்டு முறையாக பதிவு செய்யப்பட்டு பங்குதாரர்களுக்குள் ஒப்பந்த பதிவு செய்து தொடங்கப்பட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மேற்படி கூட்டுத் தொழில் நல்ல முறையில் நடந்து வந்தது. அப்போது வரவு செலவு காண்பிக்கப்பட்டு நபர் ஒன்றுக்கு ரூ.11 லட்சத்து 90 ஆயிரத்து 146 வீதம் தர வேண்டி உள்ளதாக கணக்கு முடிக்கப்பட்டது. மேற்படி நிறுவனம் இடமிருந்து நானும் மற்றொரு பங்குதாரராக எனது மனைவி மகேஸ்வரியும் மேற்படி கூட்டுத் தொழில் இருந்து விலகி கொள்வதாக கூறினோம். அதனை ஏற்றுக்கொண்டு மேற்படி நிறுவனத்தின் பங்குதாரர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு மூன்று மாதத்திற்குள் எங்கள் இருவருக்கும் சேர வேண்டிய பங்கு தொகையான ரூ. 23 லட்சத்து 80 ஆயிரத்து 290 திருப்பி செலுத்துவதாக கூறினார். அதனை ஏற்றுக் கொண்டு மேற்படி கூட்டுத் தொழிலில் எவ்வித தலையிடும் நாங்கள் எதுவும் செய்யவில்லை. ஆனால் பங்குதாரர் இன்றுவரை எங்களுக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்காமல் ஏமாற்றும் நோக்கத்தில் காலதாமதம் செய்து வருகிறார் பலமுறை நேரில் கேட்டும் தர மறுக்கிறார். பங்குத்தொகை தர முடியாது உங்களால் முடிந்ததை பாருங்கள் என்றும் உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டுகிறார்.எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களுக்கு வரவேண்டிய பங்கு தொகையை சம்பந்தப்பட்டவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் .