Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச் கிருஷ்ணானுண்ணி தலைமையில் ஆய்வுக்குழு கூட்டத்தில் 2023-24-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச் கிருஷ்ணானுண்ணி  தலைமையில் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டத்தில் 2023-24-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு, தெரிவித்ததாவது,
ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வேளாண்மைத் துறை, மீன்வளத்துறை, கைத்தறித் துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் உள்ளன. 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான கடன் இலக்கு ரூ.16 ஆயிரத்து 30 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கான கடன் இலக்கு + ரூ.8814.95 கோடிகள், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் இலக்கு: ரூ.5465.26 கோடிகள், பிற முன்னுரிமைகளுக்கான கடன் இலக்கு : ரூ.1596.48 கோடிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கடன்களை, தொடர்புடைய வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அப்போதுதான் அரசுத்துறைகள் மீதும், வங்கிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். வியர்ணப்பித்து நிலுவையிலுள்ள கடன் விண்ணப்பங்களை பரிசிலித்து நடவடிக்கை மேற்கொண்டு கடன்களை வழங்கிடவும், குறிப்பாக விவசாமிகளுக்கு வழங்கப்படுகின்ற பயிர்கடன் மற்றும் சிறுகுறு தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்படுகின்ற கடன்கள் வழங்குவதில் எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காமலும், முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கிட வங்கிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உறுவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைபடுத்தும் திட்டம் ஆகிய சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இத்திட்டங்களின் மூலம் சிறப்பான சேவைகள் வழங்கிய சிறந்த வங்கிகள் மற்றும் சிறந்த வங்கிக்கிளைகளுக்கும் 2022-2023 ஆண்டிற்கான விருதுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். மேற்காணும் நான்கு திட்டங்கள் மூலரான 326 நபர்களுக்கு ரூ.58.60 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. ஆனந்தகுமார் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. ஆனந்தகுமார், மாவட்டத் தொழில்மையத்திகள் மேலாளர் திரு. மருதப்பன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் டி. அசோக்குமார், தாட்கோ மாவட்ட மேலாளர், ரிசர்வ் வங்கி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொனர்டனர்,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.