1) கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 125 கூடுதலாக வழங்க உத்தரவு.
2) நெல்லுக்கு கூடுதல் ஊக்கத் தொகையாக சன்ன ரகத்திற்கு குவின்டாலுக்கு 100 ரூபாயும், பொது ரகத்திற்கு ரூபாய் 75 ஒரு குவின்டால்க்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள் மேலும் 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை.
3) இலவச மின்சாரத்திற்கு ரூபாய் 6536 கோடி ஒதுக்கீடு மற்றும் 23 லட்சம் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க நடவடிக்கை.
4) திருச்சி டு நாகை இடையில் வேளாண் தொழில்நுட்ப பெருந்தடம் அமைக்க ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
5) பனைமர சாகுபடியை ஊக்குவிக்க பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திட ரூபாய் 12 கோடி ஒதுக்கீடு.
6) அரசம்பட்டி தென்னைக்கு, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, மூலனூர் குட்டை முருங்கைக்காய் உள்ளிட்ட பத்து விவசாய விளை பொருட்களுக்கு அகில உலக அளவில் புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
7) கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் வாழை (மரம்)ஆராய்ச்சி மையம் அமைத்திட ரூபாய் 125 கோடி ஒதுக்கீடு.
8) சிறு குறு விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும் ரூபாய் 5 லட்சம் நிதியுடன் சான்றிதழை குடியரசு தின விழா அன்று வழங்கப்படுவது விவசாயிகளை ஊக்கப்படுத்துவது வரவேற்கத்தக்கது என ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை கே என் பாஷா வரவேற்கிறார்.