Type Here to Get Search Results !

ஜாக்டோ -ஜியோ அமைப்பின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில், மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

ஜாக்டோ -ஜியோ அமைப்பின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களில், மனித சங்கிலி போராட்டம்  நடந்தது. ஈரோட்டில் நடந்த போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விஜயமனோகரன் தலைமை தாங்கினார்.சரவணன், வீரா கார்த்திக், மதியழகன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.நேரு கோரிக்கை பற்றி பேசினார்.
சி.பி.எஸ். திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பனியாளர்கள் எம்.ஆர்.பி. செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசியரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வரை மனித சங்கிலியில் நின்றனர். இதில் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், பிரகாசம், குமரேசன், தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.