ஈரோடு, தாளவாடி, பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் , சத்தியமங்கலம் உள்ளிட்ட 10 தாலுக்கா அலுவலங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளது...*
*வருவாய்த்துறையினரின் இரு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டதால், ஈரோடு மாவட்டத்தில், தாசில்தார் உட்பட நூறு 100 சதவீதம் 445 வருவாய் அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் வருவாய்த்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ள வரும் பயனாளிகளுக்கு எந்தவித தகவலும் தெரியாததால், வேதனையுடன் திரும்பிச் செல்கின்றனர்...*
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கைகளை வலியுறுத்தி 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியலை மேலும் தாமதம் செய்யாமல் உடன் வெளியிட வேண்டும் எனவும், முதுநிலையான வருவாய்த்துறை அலுவலர்களின் பதவி இறக்கம் பாதிப்புகளை சரி செய்ய, ஏற்கனவே ஏற்கப்பட்ட தீர்வின்படியான ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற இரு கோரிக்கைகளின் மீதும் நேரடியாக தலையிட்டு, உடனடியாக ஆணைகள் வழங்கி சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் நூறு 100 % - 445 வருவாய் அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்று, ஒரு வருவாய் துறை அலுவலர் கூட பணிக்கு வரததால், ஈரோடு மாவட்டத்தில் அரசு சார்ந்து இன்று நடைபெற உள்ள பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஈரோடு, தளவாடி, பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி, அந்தியூர்,,கோபி, சத்தியமங்கலம் உள்ளிட்ட 10 தாலுக்கா அலுவலங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் போராட்டம் குறித்து வருவாய்த்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ள வரும் பயனாளிகளுக்கு எந்தவித தகவலும் தெரியாததால், வேதனையுடன் திரும்பிச் செல்கின்றனர்.