Type Here to Get Search Results !

ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஈரோடு, பிப். 3-

ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த ஜனவரி 30ம் தேதி காலை 9 மணியளவில் இறையனுமதி பெறுதல், வினைகள் தீர்க்கும் விஷ்வக்சேனர் ஆராதனையுடன் தொடங்கியது. தொடர்ந்து வாசுதேவ புண்யாகம், மகா சுதர்சன் ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மாலை 5 மணிக்கு நவக்ரஹ ஹோமம், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து, ஜனவரி 31ம் தேதி காலை 5 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி மற்றும் பாலாலய திருவாராதனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், அதைத் தொடர்ந்து, காலை 8.30 மணி முதல் வாஸ்து சாந்தி,காவிரியில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வருதல் விமான கோபுர கலச ஸ்தாபனம், காப்புக் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
3-வது நாளாக பிப்ரவரி 1ம் தேதி காலை 7 மணிக்கு கும்பஸ்தாபனம், முதற்கால ஹோமம், பூர்ணாஹுதி, இரண்டாம் கால ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.4-வது நாளாக யாக சாலை திருஆராதனம், வசந்தபால் தீர்த்தம், மூன்றாம் கால ஹோமம், தொடர்ந்து, மூலவர் முகில்வண்ணனுக்கும், கமலவல்லித் தாயாருக்கும் 81 கலச, பரிவார திருமஞ்சனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, 5-வது நாளாக, முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில், காலை 6 மணிக்கு பரிகார யாக சாலை பூஜைகள் தொடங்கின. தொடந்து, 7 மணிக்கு மேல் 5ம் கால பரிவார யாக சாலை பூர்ணாஹுதி, கலசங்கள் புறப்பாடு, யாக சாலையில் ஹோமங்கள் துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையடுத்து, பரிவார ஆலய தெய்வங்களுக்கு விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன.
இதையடுத்து முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் 9.30 மணிக்கு மேல் நடைபெற்றது. இதில், பரிவார ஆலய தெய்வங்கள், விமான கோபுரங்கள் மற்றும் மூலவர் கஸ்தூரி அரங்க நாதப் பெருமாள், கமல்வல்லித் தாயார் மூலவர் விமானம், தாயார் விமானம் மற்றும் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோபுர தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, அனைவர் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர், செங்குந்தர் பள்ளி மைதானத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலையில், திருக்கல்யாணம் மற்றும் சுவாகிகள் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அதன் வழிகாட்டுதலின்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.