ஈரோடு, பிப்.10 -
ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரம் துரிதமாக நடக்கிறது.அனல்பறக்கும் வகையில் பிரச்சாரம் செய்தாலும் மக்கள் மனம் இரட்டை இலை பக்கம் உள்ளது.
இன்றைக்கு கட்டவிழ்த்துவிடப்படிருக்கி ன்ற ஆட்சிக்கு கடிவாளம் போன்று அதிமுக வெற்றி இருக்கவேண்டும். கண்முன் தெரியாமல் போகக்கூடிய ஆட்சிக்கு வேகத்தடை வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்.
கடந்த அதிமுகவின் 10 ஆண்டுகளில் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.திமுக வின் இரண்டு ஆண்டுகளில் நகர் மன்ற உறுப்பினர்களின் அராஜகம், மக்களை திரும்பி பார்க்காத செயல்கள் உள்ளது.
பேரறிஞர் அண்ணா சென்னது போல்,இந்த ஆட்சியின் அவலங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியின் தெருவோரங்களிலும் டீக்கடைகளிலும் பேசப்பட்டு வாக்குச்சாவடியில் முடிவடைகின்றபோது இரட்டை இலை வெற்றி பெறும் .இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு திமுக வரிந்து கட்டிக்கொண்டு ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்றுவிடும் என்ற தேர்தல் பயத்தை தேர்தல் ஜூரத்தையும் இறக்கிறதை காண முடிகிறது.
ரூ.80 கோடி மதிப்பில் பேணா சின்னம் வைப்பது தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,
பேனாவை சட்டை பாக்கெட்டில் தான் வைக்க வேண்டும். அதை தாண்டி எங்கு வைத்தாலும் அதற்கு எதிர்ப்பு கிளம்பும்.
இவ்வாது அவர் கூறினார்