ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிறைவடைந்து விட்டது. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க- அ.தி.மு.க.வை சேர்ந்த வெளி மாவட்ட நிர்வாகிகள் பலர் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே கூட்டங்கள் நடந்து வருகிறது. கூட்டங்கள் முறையாக அனுமதியுடன் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படையினர் அவ்வபோது சோதனை செய்து வருகின்றனர்.
நிலையில் ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகே காலி இடத்தில் நேற்று திமுக 36-வது வார்டு செயலாளர் ஹரிஹரன் முறையான அனுமதி பெறாமல் கட்சிக்கொடி மற்றும் 100 கட்சிக்காரர்களுடன் கூட்டம் நடத்தியுள்ளார். இதை கண்டறிந்த தேர்தல் நிலை குழு அலுவலர் மெய்யழகன் இது குறித்து ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஹரிஹரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.