ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தென்னரசு ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்ஈரோடு இடையகாட்டுவலசு பகுதியில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் ஒட்டி அதிமுக பாரதி ஜனதா கூட்டணி கட்சிகளின் சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தென்னரசு அவர்களை ஆதரித்து
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவரும் அதிமுக கூட்டணியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு இடங்களில் வாகனத்தின் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார் .
வில்லரசம்பட்டி அருகே அதிமுகவின் சார்பில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது .
இதனை அடுத்து அவர் ஈரோடு வில்லரசம்பட்டியில் இருந்து புறப்பட்டு பல்வேறு பகுதிகளில் தென்னரசுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க கேட்டு திமுக அரசின் இரண்டு ஆண்டு கால அவல ஆட்சியை வெளிப்படுத்து முகமாக உரையாற்றி அவர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக 2 ஆண்டுகளில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கிழக்கு தொகுதியில்
அன்றாட அடிப்படைத் தேவைகள் என குடிநீர் சாலை மின்விசதி உள்ளிட்டவைகளை கூட முழுமையாக செயல்படுத்தாத திமுக அரசு விடியாத அரசாக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டி அவர் பிரச்சாரம் மேற்கொண்டார் .
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை முறையான தேர்தலாக நடத்தாத வகையில் மக்களை அடக்கி வைத்து வாக்கு கேட்டு ஒரு வேட்பாளர் மக்களை சந்திக்க முடியாமல் கொட்டகைகளில் சிறை வைத்து திமுக தனக்கு சாதிகமான தேர்தலாக இந்த கிழக்கு தேர்தலை நடத்தி விட்டது நினைப்பதை பொதுமக்கள் தட்டி கேட்பார்கள் கிழக்கு தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் அவர் பேசினார்